RPFL தரகு வணிகம்

RPFL தரகு வணிகம்

மூன்று தசாப்த கால யுத்தத்தின் முடிவில் இலங்கை புதிய பொருளாதார யுகத்தை நோக்கிச் செல்கிறது. அந்தப் பாதையில் சிறு தொழில் துறையானது (SME) குறிப்பிடத்தக்க வகையில் வளர்ந்துள்ளது. விவசாயம், மீன் பிடித்தல், சுற்றுலாத்துறை ஆகியவற்றில் சிறிய அளவிலான வணிகங்களைச் செய்யத் திட்டமிட்டுள்ள பலர் நாடு முழுவதிலும் உள்ளனர். இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் முன்னேற்றும் சிறிய, நடுத்தரத் தொழில் துறைக்கு ஊக்கமளிக்கும் ஒரு குறுகிய கால நிதியுதவியை RPFL வழங்கும்.

RPF Hire Purchase

RPFL வாடகைக் கொள்வனவு

வாடகை கொள்வனவு வாகனங்களின் நிதியிடலில் ஒரு பிரபலமான வழியாகும். ஆரம்ப வைப்புத் தொகையை செலுத்திய பின், உங்கள் வாகனத்தை வழக்கமான மாதாந்தக் கொடுப்பனவுகளில் வாங்குவதற்கான விருப்பத்துடன் வாடகைக்கு அமர்த்துங்கள். வாடகை கட்டணம் உட்பட எல்லாக் கட்டணங்களையும் நீங்கள் செய்த பிறகு, வாகனம் உங்களுடையதாக இருக்கும். ஒரு வாடகைக் கொள்முதல் ஒப்பந்தத்தின் நன்மை, ஆளொருவர் ஒரு பயன்படுத்திய வாகனத்தை வாங்குதல், தவணை அடிப்படையிலான திருப்பியளித்தல் என்பன வற் வரிக்கு உட்பட்டவையல்ல, இதனால் அது மிகவும் மலிவானதாகும்.

RPF Business Loans

RPFL வணிகக் கடன்கள்

கூட்டிணைவு வாடிக்கையாளர்களுக்கும் சிறு தொழில் துறை வாடிக்கையாளர்களுக்கும் மூலதனத் தேவைகள், மூலதனச் செலவினங்களுக்கான நிதி, உபகரணங்கள், இயந்திர சாதனங்கள் மூலப்பொருட்களை வாங்குவதற்கான நெகிழ்வான ஏற்பாடுகள் என்பவற்றுடன் வணிக கடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

RPFL சுழற்சி முறைக் கடன்

சுழற்சி முறை கடனுதவி என்பது, கடன் ஒழுங்கு முடிவடையும் வரை எந்த நேரத்திலும் எந்த வகையிலும் மறுபடியும் மறுபடியும் கடனாளியின் கடன் தொகை திரும்பப் பெறக்கூடிய, திருப்பிச் செலுத்தக் கூடிய ஒன்று.

முக்கிய வசதிகளை அடிப்படையாகக் கொண்டு துணை வசதிகளை வழங்கலாம். இதில் சுழலும் இறக்குமதி கடன் வசதி விண்ணப்பதாரரின் கோரிக்கையின் பேரில் அவ்வப்போது வழகங்கப்படக் கூடிய வாழ் நாள் வசதி ஆகும்.

RPFL தானியக்கக் கடன்

தானியக்கக் கடன் குறிப்பாக உயர் நிகர மதிப்பார்ந்த வாடிக்கையாளர்கள், கூட்டிணைவு வாடிக்கையாளர்கள் தற்போதுள்ள வாடிக்கையாளர்கள் ஆகியோருக்கு அவர்களுய பெயரின் கீழ் ஒரு வாகனத்தை வாங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

RPFL நுண்பாகக் கடன்

நுண்பாகக் கடன் சமூகத்தின் குறைந்த வருமானம் பெறும் வகையினரை இலக்காகக் கொண்டு நெகிழ்வான ஒப்பந்தங்களின் மூலம் அவர்களின் உடனடி நிதித் தேவைகளை தீர்க்கின்றது. இது ஒரு சமூகத்தை அதன் வாழ்வாதாரங்களைத் தக்க வைத்து முன்னேற்றவும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் RPFL ஐ இயன்றதாக்குகின்றது. இந்தக் கடன் வருமானம் உருவாக்கும் திட்டங்கள், துவக்க வணிகத்திற்கான செயற்படு மூலதனம், வசதி குறைந்த மாணவர்களுக்கான கல்வி ஆய்வுகள், சிறு வர்த்தகங்களை மேம்படுத்தல் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சிகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

Funding to retired,disabled soldiers (Oba wenuwen Api)

After the war, we have seen that the lots of soldiers who retired from the service or disabled during the war are looking for some avenues to start a business to ensure a better future to their families. However, they might have problem of finding startup capital. As a gratitude for them RPFL will allocate some funds to grant loans to address this issue after careful analysis of the feasibility of these new businesses.