தலைமை நிறைவேற்று அலுவலரின் அறிக்கை

ஜனாப் கே. எம். எம். ஜபீர்


mr-jabirஎதிர்கால நோக்கில், இலங்கையின் நிதித் தொழிற்றுறையை அதிக உயரத்திற்குக் கொண்டுசெல்வதற்கு நிதித்துறையை ஒருங்கு திரட்டுவது முக்கியமான மூலோபாயத் தெரிவாக அமையும்.

எங்கள் நோக்கம், அனைத்து பங்குதாரர்களுக்கும் மதிப்புச் சேர்க்கக் கூடியதான, இலங்கையில் மிகவும் விரும்பப்படும் ஒட்டுமொத்த நிதிச்சேவை வழங்குனராக இருத்தலாகும். இந்த இலக்கைச் சந்திப்பதில் அனைத்து வாடிக்கையாளர் பிரிவுகளும் தொடர்ச்சியாக நெருக்கமாக ஆராயப்பட்டு, குத்தகை முதல் வாடகைக் கொள் முதல், தரகு வணிகம், வைப்பு திரட்டுதல், இஸ்லாமிய நிதி, கூட்டுத்தாபன தீர்வுகள் வரை ஒரு தொகுப்பான சேவையை வழங்குவதற்கு எங்களுக்கு உதவும். இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வேண்டுகோள்களையும் கட்டளைகளையும் கண்டிப்பாகவும் இறுக்கமாகவும் கடைப்பிடிக்கின்றோம்.

நாம் புத்தாக்கங்களில் முதலீடு செய்வதுடன், பில்லியன் கழகத் தொழிற்றுறையை ஒரு குறுகிய காலத்தில் அடையும் ஒரு இலட்சிய இலக்கை நோக்கிச் செயற்படுகின்றோம். நியாயமான வியாபாரமாக எங்கள் நற்பெயரை தொடர்ந்து கட்டியெழுப்பிப் பராமரித்தால் எங்களது அபிலாஷைகளை மட்டுமன்றி பலவற்றை நாங்கள் அடையலாம். குறிப்பாக, வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கையை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறோம், வழங்குனர்களுடன் நல்ல உறவை வளர்த்து, அனைத்து வகையான நிதி தீர்விற்கும் மிகவும் விரும்பத்தக்க நிதி நிறுவனமாக இருக்கிறோம்.

ரிச்சர்ட் பீரிஸ் குழுவின் ஒற்றுமை, உள்ளக வளங்களை நன்கு முதலீடாகக் கொண்டு உள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து பார்க்கக் கூடியதாயிருப்பதால், அது ஒரு கூடுதல் அனுகூலமாக இருக்கும். “குழுவின் பலங்களை பயன்படுத்தி பல்வேறு மட்டங்களில் ஏராளமான மதிப்புச் சேர்த்தல்கள் காணப்படுகின்றன. இது இணையற்றதாகவும் போட்டியாளர் யாரும் வழங்கமுடியாததாகவும் இருக்கும் அதே நேரத்தில் குழுவின் வலிமை எந்தவொரு சவாலையும் உறுதியுடன் எதிர்கொள்ள வகை செய்யும். நாடெங்கிலும் உள்ள எங்கள் சகோதர நிறுவனங்களின் பிரசன்னம் எல்லா இலங்கையர்களுக்கும் வசதியான சேவைகளை வழங்குவதற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பினை வழங்கும்.”

நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பிரிவுகளிலும் எமது தலைமைத்துவ நிலையை நாம் விரிவுபடுத்துகிறோம். இதற்கு, ஆட்சேர்ப்பு, தொழில் முன்னேற்றம், ஊழியர் ஈடுபாடு ஆகியவற்றில் சிறந்த நடைமுறைகளை உறுதிப்படுத்தக்கூடிய சிறந்த அணியை குவியப்படுத்த வேண்டும். நிச்சயமாக ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனம், எங்கள் திட்டத்தின் படி, இலங்கையில் வரப்போவதுமான நிபுணத்துவம் வாய்ந்த சிறந்த நிதிய சேவை வழங்குனராகவும் உள்ளது.