RPFL நிதி நிறுவன நிலையான வைப்புக்கள்                                     விசாரணைகள்:0722215357

ரிச்சர்ட் பீரிஸ் நிதி நிறுவனம் என்பது இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களிடமிருந்து வைப்புகளை ஏற்க அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கையில் மிகப்பெரியதும் மிகவும் வெற்றிகரமானதுமான பன்முக வணிக நிறுவனங்களில் ஒன்றானதுமானதும் 84 வருட கால வரலாற்றுப் பெருமை கொண்டதுமான ரிச்சர்ட் பீரிஸ் கம்பனி பி.எல்.சி.யின் முழு உரிமையுள்ள ஒரேயொரு நிதியியல் துணை நிறுவனமாகவுமுள்ள ஒரு பதிவு செய்யப்பட நிறுவனமாகும்.
RPFL நிதி நிறுவனம் உங்கள் கடின உழைப்பின் சேமிப்பை நிலையான வைப்பில் இடுவதன் மூலம் உங்கள் வருங்கால வாய்ப்புகளை உறுதிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குவதுடன் போட்டி வருவாயை ஈட்டும் அதேவேளை தோற்கடிக்கப்பட முடியாத உறுதித் தன்மையினைக் கொண்ட ரிச்சர்ட் பீரிஸ் குழுவின் கீழ் உங்களை ஒரு தனித்துவமான பயனாளியாக்குகிறது.

நிலையான வைப்பு 1 மாதங்களிலிருந்து 60 மாதங்களுக்கு தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ வைக்கப்படும்.

** நிலையான வைப்பு வட்டி வீதங்கள் 20 அக்டோபர் 2023 முதல் அமுலிலுள்ளவாறு.

காலம் முதிர்ச்சி வ.ச.வி மாதாந்தம் வ.ச.வி
1 மாதம் 11.00% 11.57% 11.00% 11.57%
3 மாதங்கள் 12.50% 13.10% 11.50% 12.13%
6 மாதங்கள் 11.25% 11.57% 10.25% 10.75%
9 மாதங்கள் 11.25% 11.41% 10.25% 10.75%
12 மாதங்கள் 12.00% 12.00% 11.00% 11.57%
13 மாதங்கள் 12.00% 11.94% 11.00% 11.57%
15 மாதங்கள் 11.75% 11.59% 10.75% 11.30%
18 மாதங்கள் 11.75% 11.43% 10.75% 11.30%
24மாதங்கள் 11.50% 10.91% 10.50% 11.02%
36 மாதங்கள் 11.25% 10.18% 10.25% 10.75%
48 மாதங்கள் 11.00% 9.54% 10.00% 10.47%
60 மாதங்கள் 10.50% 8.81% 9.50% 9.92%

சேமிப்பு வட்டி விகிதம்: Normal 6% / Senior 6% / Minor 6.5%

*** சிரேஷ்ட பிரசைகளுக்கு நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவைக்கான நிரப்புறையாக அதிகபட்சம் 0.5% மேலதிகமாக வழங்கப்படும்*****


RPFL நிதியின் நிலையான வைப்புடன்:

  • உங்கள் நிலையான வைப்புக்களுக்கு எதிராக உடனடி கடன் வசதிகள்.
  • 12 முதல் 60 மாதங்கள் வரையான முதலீட்டு காலங்களில் போட்டித் தன்மையான வட்டி விகிதங்கள்.
  • மற்றைய கடன் வசதிகளுக்காக ஒரு சிறந்த பிணையாக நிற்றல்.
  • வங்கி வரைவுகள்/கொடுப்பனவுக் கட்டளைகளை ஒரே நாளில் காசாக்குதல்.
  • உங்கள் கோரிக்கையின் பேரில் மீதியை உறுதிப்படுத்தல் / வரி சான்றிதழ்களைப் பெறுதல்.
  • RPFL நிதியுடனான நி.வை என்பது உங்கள் எதிர்கால வாய்ப்புக்களுக்கான பாதுகாப்பு.
  • எளிய செயன்முறை, சிறந்த வாடிக்கையாளர் சேவை.

** RAM ரேற்றிங்ஸ் லங்கா லிமிட்டெட், ரிச்சர்ட் பீரிஸ் குழுவிற்கான கடன் தரத்தை BBB ஆக ஒதுக்கியுள்ளது**


நிபந்தனைகளும் ஏனைய தகவல்களும்:


தேவையான ஆவணங்கள் – தனியாட்களுக்கு

1.விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்
2.உங்கள் வாடிக்கையாளர் படிவத்தை அறிக பதிவிறக்கம்
3.தேசிய அடையாள அட்டையின் நகல்
4.பணஞ்செலுத்திய சிட்டை ஆதாரம் (கட்டாயமில்லை)

தேவையான ஆவணங்கள் – நிறுவனங்களுக்கு

1.விண்ணப்பப் படிவம் பதிவிறக்கம்
2.உங்கள் வாடிக்கையாளர் படிவத்தை அறிக பதிவிறக்கம்
3.வணிகப் பதிவினது நகல்
4.நிறுவனத்தின் கடிதத்தலையில் கையொப்ப அதிகாரங்களின் உறுதிப்படுத்துதல்.
5.அரச சார்பற்ற நிறுவனமாயின் WHT வரி விலக்களிப்பு பற்றிய உள்நாட்டு இறைவரி அல்லது சட்டபூர்வமாகச் செல்லுபடியாகும் ஆவணம்.