குழுமத் தலைவரின் செய்தி

கலாநிதி. சேன யத்தெஹிகே


எங்கள் நிறுவனம் பல்வகைமைப்படுதல், வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தும் ஒரு கொள்கைக்கு உறுதியளிக்கிறது. எங்கள் தயாரிப்புகளில் நம்பிக்கையையும் நம்பகத் தன்மையையும் அதிகரிப்பதனூடாக வாடிக்கையாளர்களுக்கு குழுச் சேவைகளை மேலும் கவர்ச்சிகரமாக்குவது எங்கள் கொள்கை. பரந்தளவிலான தயாரிப்புக்கள் மீது எமது செயற்பாடுகளை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளதுடன் குழுவின் புவியியல் பரவலையும் அதிகரித்துள்ளோம். மிகச் சமீபத்தில் நாங்கள் நிதியியல் வியாபாரத்திற்கு கிளை பரப்பி ஒரு நிதி நிறுவனத்தை ஆரம்பித்தோம். இந்த கொள்கையின் தொடர்ச்சியாக புதிய துணை நிறுவனங்களை உருவாக்கவும், ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்க நிதி நிறுவனங்களைக் கையகப்படுத்தவும் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

காத்திரமான நிதி முகாமைத்துவம், திறமையான மனித வளக் குழாம், எமது கொள்கைகள், உத்திகள் என்பவற்றைக் கொண்டிருக்கும் வணிக வாய்ப்புகளை உருவாக்குவது, பயன்படுத்துவதற்கான திறமை ஆகியவற்றின் ஊடாக நாட்டில் மிகப் பெரிய குழுக்களில் ஒன்றாக நாம் வளர்ந்துள்ளோம்.

ஆர்பிகோ சுப்பர் சென்ரர் குழு நிறுவனங்களின் சில்லறை விற்பனைப் பிரிவும் ஆர்பிகோ கடைகளின் வலைப்பின்னல்களும் தீவின் பல பாகங்களுக்கும் விரிவாக்கப்பட்டுள்ளன. அடுத்த சில ஆண்டுகளில் தீவு முழுவதுமான முழுமையைப் பெறவுள்ள இந்தக் குழுவின் சில்லறை நடவடிக்கைக்கு ஒரு பெரிய விரிவாக்கம் நடைபெற்று வருகின்றது. வாடிக்கையாளர்கள் தங்கள் அனைத்துத் தேவைகளையும் ஒரே கூரையின் கீழ் பெற்றுக் கொள்ளக் கூடியதாக சுப்பர் சென்ரர்களில் கிளை அலுவலகங்களை அமைப்பதன் மூலம் எங்கள் நிதி நிறுவனத்தைப் பலப்படுத்த இந்த வலையமைப்பைப் பயன்படுத்தி வருகின்றோம். இலங்கை மத்திய வங்கியுடன் பதிவு செய்யப்பட்ட வளர்ந்து வரும் நிதி நிறுவனமாக, வைப்பு, கடனளிப்பு திரட்டல்கள் மூலம் எமது நிதிச் சேவைகளை நாடு தழுவியதாக நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். நிதி சேவைகள் அலகை ஆக்கும் பொருட்டு, குழுவில் இருக்கும் நிறுவனங்கள், ஏற்கனவே குழுவுடன் கணிசமான காலப்பகுதிக்குச் சேர்ந்தியங்கும் முதன்மை விநியோகத்தர்கள், குழுவிலுள்ள பணியாளர்களிக்கும் எங்கள் சேவைகளை விரிவுபடுத்த எதிர்நோக்குகிறோம். இத்தகைய குழுவிற்குள்ளான பன்முகப்பட்ட இருப்பு ஒரு போட்டித்திறன் அனுகூலமாகக் கருதப்படக் கூடியது.

CSR (கூட்டுச் சமூகப் பொறுப்பு) எமது நிறுவனத்தின் கொள்கையில் உள்ளார்த்தமாக உள்ளது. எங்கள் நோக்கம் எங்களது பங்குதாரர்களுக்கு ஒரு இலாபகரமான நிறுவனத்தை உருவாக்குவது மட்டுமல்ல, நாங்கள் செயற்படும் சமூகங்களை வளமூட்டவும் திருப்பிக் கொடுக்கவும் ஏதோவொரு அம்சத்தை வழங்குவதுமாகும். எங்கள் நிறுவனத்தின் பலமும் நற்பெயரும், எங்கள் நிதி வணிகத்தின் மீது பொதுமக்கள் காட்டுகின்ற நம்பிக்கை என்பவற்றால் எங்கள் வணிக போட்டியாளர்களுடன் நாம் வெற்றிகரமாகப் போட்டியிட முடிவதாயிருப்பதாக நம்புகின்றோம். எமது நிதி வர்த்தகம் காலத்துடன் வளர்ந்துசெல்லும் என நம்புகிறோம். எமது நிதியியல் வணிகம் வளர்ந்து வருவதால் பரந்த வியாபார சமுதாயத்தால் அதன் நன்மைகளை அனுபவிப்பதோடு நீண்டகால அடிப்படையில் நாட்டில் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்யும் என உறுதி கூறலாம்.