2021/22 நிதியாண்டுக்கான மீள்தன்மையுடைய செயல்திறனை Richard Pieris Finance அறிவித்துள்ளது

Mr.Kithsiri Wanigasekara (Chairman)          Mr. Lohika Fonseka (CEO)

Richard Pieris Group இற்கு கீழ் இயங்கும் துணை நிறுவனமும், புகழ்பெற்ற Arpico பிராண்டின் கீழ் உள்ள ஒரே ஒரு நிதியுதவிப் பிரிவுமான Richard Pieris Finance Limited ஆனது, தற்போது நிகழும் சவால் நிறைந்த பொருளாதாரப் பின்னணியிலும், 2021/22 நிதியாண்டில் உறுதியான நிதிச் செயல்திறனை அடைந்துள்ளது.

இந்த நிறுவனத்தின் அர்ப்பணிப்புமிக்க பணியாளர்கள் மற்றும் விவேகமான நிர்வாக உத்திகளின் உதவியோடு, Richard Pieris Finance இன் வரிக்கு முந்தைய லாபம், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது (PBT) 283% இனால் அதிகரித்து ரூ. 444 மில்லியன் ஆக பதியப்பட்டது.

இந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் வருவாய் 16% இனால் அதிகரித்து ரூ.2,441 மில்லியனாக பதியப்பட்டது. அதேவேளை இந்நிறுவனத்தின் வைப்புத் தளமும் சொத்துத் தளமும் முறையே ரூ.9,910 மில்லியனாகவும், ரூ.17,927 மில்லியனாகவும் இந்த ஆண்டில் வளர்ச்சி கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த வருடத்தின் சாதனைகள் மற்றும் மைல்கற்களைப் பற்றி கருத்து தெரிவித்த Richard Pieris Finance Limited இன் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. லோஹிக பொன்சேகா, “Richard Pieris Finance Limited நிர்வாகமானது இந்த நாடு சந்தித்துள்ள மிகவும் சவாலான காலப்பகுதி ஊடாக எமது நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளது என்பதை எமது பங்குதாரர்களுக்கு தெரிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களின் சாதனைகளை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் இந்தப் பாதையைத் தொடர விரும்புகிறோம். எங்கள் டிஜிட்டல் முயற்சியின் ஆதரவுடன், எமது வாடிக்கையாளர்களின் வசதிக்காக, நாம் CEFTS மற்றும் JustPay இல் உறுப்புரிமையை பெற்றுள்ளோம். மேலும், எங்கள் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி தங்க கடன் சேவை உட்பட பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், எங்களது திட்டங்களை செயல்படுத்தி, எங்கள் நன்மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கோடு 2021/22 ஆம் ஆண்டில் மூன்று சேவை நிலையங்களை முழு அளவிலான கிளைகளாக மேம்படுத்தி உள்ளோம். இவ்வாண்டில், Richard Pieris குழுமமானது அதன் Tier – 1மூலதனத் தளத்தை பலப்படுத்தும் நோக்கோடு ரூ. 280 மில்லியனை உட்செலுத்தியது. இதன் மூலம் இந்நிறுவனம் தனது Tier-2 மூலதனத்தளத்தை பலப்படுத்த, ரூ. 1 பில்லியனான அதன் கடன் மூலதன உட்செலுத்தலை வெற்றிகரமாகப் பூரணப்படுத்தியது. இதன்மூலம், ஏனைய நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், மூலதன போதுமையில், இந்நிறுவனம் முன்னிலையில் இருந்தது. ஸ்திரத்தன்மை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையை நாம் பராமரிக்கும் அதே வேளை, நமது வாடிக்கையாளர்களின் நன்மைகளை நாம் எப்போதும் முன்னிலைப்படுத்தி, நாம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிப்பதற்கான நிலைப்பாட்டின் மூலம் எங்கள் வணிக விரிவாக்கத்தைத் தொடர நாங்கள் எதிர்நோக்குகிறோம்.”

Richard Pieris Finance Limited இன் ஸ்திரத்தன்மை மற்றும் பலத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இலங்கையின் முதன்மையான கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான Fitch Ratings Lanka Limited ஆனது இந்நிறுவனத்துக்கு AA-(RWN) தரத்தினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில், தற்போதைய கொந்தளிப்பான பொருளாதார சூழலூடாக முகாமைத்துவக் குழுவை வழிநடத்தும் நோக்கோடு, நிதிச் சேவைத் துறையில் அனுபவம் வாய்ந்த நிபுணரான திரு. கித்சிறி வணிகசேகர அவர்களை பணிப்பாளர் சபை தலைவராக நியமித்ததோடு, பல்துறை வல்லுநர்களையும் சபைக்கு நியமித்தது. Richard Pieris Finance Limited நிறுவனத்தின் நிர்வாகக் குழுவானது, மூத்த வங்கியாளர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் உட்பட பல துறைகளில் உள்ள நிதியியல் துறை வல்லுநர்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இடர் மேலாண்மை மற்றும் இணக்கம் தொடர்பான வலுவான உள் கட்டுப்பாடுகள் மற்றும் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தால் வலுவூட்டப்படும்Richard Pieris Finance Limited ஆனது எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி வேகத்தை தக்கவைத்துக்கொள்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. Richard Pieris Finance Limited ஆனது இலங்கையர்களுக்கு நிலையான வைப்பு, சேமிப்பு, குத்தகை, இஸ்லாமிய நிதி, வணிகக் கடன்கள், தனிநபர் கடன்கள், அடகு வைத்தல், தளபாடங்கள் நிதியளிப்பு மற்றும் டிஜிட்டல் நிதி தீர்வுகள் உட்பட முழு அளவிலான நிதி தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. Richard Pieris குழுமம் 90 ஆண்டுகளுக்கும் மேலான வளமான வரலாற்றைக் கொண்ட பல்வகைப்பட்ட வணிகக் குழுமமாகும்.

உற்பத்தி, பெருந்தோட்டங்கள், சரக்கியக்க, சில்லறை, நிதிச் சேவைகள், ஏற்றுமதிகள், FMCG, போன்ற பல துறைகளில் பலதரப்பட்ட தயாரிப்புகளுடன் சமூகத்திற்கு சேவை செய்து வரும் இந்நிறுவனத்தின் முதன்மையான வர்த்தக நாமமான “Arpico Supercentres” 50 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த உள்ளூர் வீட்டு வர்த்தக நாமங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது. 27,000 க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட Richard Pieris and Company PLC ஆனது இலங்கையின் தனியார் துறையில் மிகப்பெரிய தொழில் வழங்குநர்களில் ஒன்றாகும்.